ஜேடர்பாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவர் பலி


ஜேடர்பாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 7 Aug 2021 6:51 PM GMT (Updated: 2021-08-08T00:58:32+05:30)

ஜேடர்பாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையம் பகுதியை‌ சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய‌ மகன் விஜய் (வயது 19). இவர் கரூர்‌ மாவட்டம் க.பரமத்தியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு‌ படித்து‌ வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் செம்மடைபாளையத்தில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காளிபாளையம் பிரிவு ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் விஜய் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த  ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் ராஜ்குமார் (23) படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு‌‌ அனுப்பி‌ வைத்தனர். அங்கு அவருக்கு‌ தீவிர சிகிச்சை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் செம்மடைபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story