கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2021 12:22 PM GMT (Updated: 2021-08-08T17:52:33+05:30)

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற பஸ்சில் இருந்து 
இறங்கி சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் வைத்திருந்த பையில் மொத்தம் ஒன்றரை கிலோ எடை கொண்ட கஞ்சா பெட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த ஒடிசாவை சேர்ந்த கோவிந்சனா (வயது 45), மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஹாசன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story