மாவட்ட செய்திகள்

மொபட் மீது கார் மோதி தம்பதி படுகாயம் + "||" + Couple injured in car crash on moped

மொபட் மீது கார் மோதி தம்பதி படுகாயம்

மொபட் மீது கார் மோதி தம்பதி படுகாயம்
மொபட் மீது கார் மோதி தம்பதி படுகாயமடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி லதா(48). இந்த தம்பதியினர் கல்லாத்தூரில் உள்ள தங்களது மகளை பார்ப்பதற்காக சென்றனர். பின்னர் வீட்டிற்கு திரும்புவதற்காக மொபட்டில் வந்தனர். ஆயாக்குளம் என்ற ஏரிக்கரையில் இருந்து ஜெயங்கொண்டம் சாலைக்கு திரும்பியபோது ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் ஜெயங்கொண்டத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி சென்ற கார், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பஸ் - கிரேன் மோதல்; 6 பேர் காயம்
ராஜபாளையத்தில் பஸ் - கிரேன் மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.
2. அரசு பஸ்-வேன் மோதல்; 21 பேர் படுகாயம்
திருச்சி அருகே கன்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது, வேன் மீது அரசு பஸ் மோதியதில் வேனில் இருந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்
விருதுநகரில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
4. பாலத்தின் மீது கார் மோதியது
வத்திராயிருப்பு அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. கார் மோதி 2 பேர் படுகாயம்
கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.