ராசிபுரத்தில் ரூ.21 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரத்தில் ரூ.21 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரம்:
ராசிபுரத்தில் ரூ.21 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.
பருத்தி ஏலம்
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் அக்கரைபட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
ஏலத்திற்கு அக்கரைபட்டி, பொரசல்பட்டி, மல்லசமுதிரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம், மின்னக்கல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுரபி ரக பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
சுரபி ரகம்
இந்த ஏலத்தில் கோவை, அவினாசி, திருப்பூர், ஆத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் பருத்தியை போட்டி போட்டு கொண்டு எடுத்தனர். இந்த ஏலத்திற்கு 693 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி மூட்டை ரூ.9,620 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10,399-க்கு ஏலம் விடப்பட்டது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 693 சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.21 லட்சத்திற்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story