காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக்குழுவினர் ஆய்வு


காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக்குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Aug 2021 4:48 PM GMT (Updated: 2021-08-29T22:18:11+05:30)

காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

உத்தமபாளையம்:
தேனி மாவட்டத்தில் மொத்தம் 45 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து 4 முறை மாநில அளவில் விருது பெற்றுள்ளது. இதையடுத்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தும் வகையில், தேசிய அளவிலான சான்றிதழ் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 
இந்தநிலையில் மாநில அளவிலான மதிப்பீட்டிற்கு மதுரை மாவட்டம் கள்ளந்திரி வட்டார மருத்துவ அலுவலர் சுல்தான் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நேற்று காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும், சித்தா மற்றும் அலோபதி சிகிச்சை குறித்தும் வட்டார மருத்துவ அலுவலர் சுதாவிடம் மருத்துவக்குழுவினர் கேட்டறிந்தனர். 
பின்னர் அங்குள்ள டாக்டர்கள் அறை, ஆய்வகம், ஊசி போடும் இடம், பிரசவ வார்டு, உள்நோயாளிகள் பிரிவு, மாத்திரைகள் வழங்கும் இடங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். 

Next Story