மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் சாவு
தொட்டியம் அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார்.
தொட்டியம், செப்.3-
தொட்டியம் அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார்.
மனைவி இறந்த அதிர்ச்சி
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பரமசிவம்பிள்ளை (வயது 70). இவரது மனைவி சரஸ்வதி அம்மாள் (65). இவர் நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் பரமசிவம் பிள்ளை அதிர்ச்சியுடனேயே இருந்தார்.
இதனையடுத்து இறுதிசடங்கிற்கான பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டு இருந்தனர். இதற்்கிடையில் துக்கத்தில் இருந்த பரமசிவம் பிள்ளை மாலை 5 மணி அளவில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். சிறிதுநேரத்திலேயே அவரும் இறந்தார்.
ஒரே இடத்தில் அடக்கம்
இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டு பாலசமுத்திரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. மனைவி இறந்த சிலமணி நேரத்தில் கணவரும் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Related Tags :
Next Story