வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா


வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 5 Sept 2021 10:10 PM IST (Updated: 5 Sept 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மன்ற தலைவர் சேட் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம் மற்றும் சேதுராஜா உள்பட பலர் கலந்து கொண்டு வ.உ.சி. படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 


இதேபோல் தேவதானப்பட்டியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு பெரியகுளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாண்டியன் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கெங்குவார்பட்டியில் வேளாளர் சங்க உறவின்முறை தலைவர் பாண்டியன் தலைமையில் வ.உ.சி. பிறந்தநாள் விழா நடந்தது. 

ஜி.கல்லுப்பட்டியில் ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் தலைமையில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. போடியில், வ.உ.சி. பிறந்த நாள் விழாவையொட்டி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் முசாக் மந்திரி தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போடியில், நகர தி.மு.க. சார்பில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தி.மு.க.வினர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கம்பத்தில் வ.உ.சி. சிலைக்கு வேளாள பெருமக்கள் சமுதாய மத்திய சங்க தலைவர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், தி.மு.க. சார்பில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தலைமையிலும், அ.தி.மு.க. சார்பில் நகரச்செயலாளர் ஜெகதீஸ் தலைமையிலும், அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் ராஜமணி தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையிலும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


Next Story