பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 10:46 PM IST (Updated: 8 Sept 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கு எடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். 2020-ம் ஆண்டு அடையாள அட்டை செல்லுபடியாகும் காலம் முடிந்தவர்களுக்கும் அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க நகர தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கோரிக்கையை விளக்கி பேசினார். . இதில் திருவாரூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் தாயுமானவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் ஜெகதீசன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோஷமிட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கிட வேண்டும். 2020-ம் ஆண்டு அடையாள அட்டை செல்லுபடியாகும் காலம் முடிந்தவர்களுக்கும் அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும். கந்து வட்டி கொடுமையில் இருந்து பாதுகாக்க ஏழை, எளிய சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வழங்க வேண்டும்.

மதுரை மாநகராட்சி வழங்கியது போல் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் தள்ளுவண்டி இலவசமாக வழங்கிட வேண்டும். கோவில் திருவிழாக்களில் விதிமுறைகளை பின்பற்றி கடை வைப்பதற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் நிர்வாகிகள் இதுகுறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மன்னார்குடி நகராட்சி ஆணையர் செண்ணுகிருஷ்ணனிடம் வழங்கினர்.

Next Story