மாவட்ட செய்திகள்

கண்மாயில் இருந்து மீட்கப்பட்ட லட்சுமி நாராயணர் சிலை + "||" + Idol restoration

கண்மாயில் இருந்து மீட்கப்பட்ட லட்சுமி நாராயணர் சிலை

கண்மாயில் இருந்து மீட்கப்பட்ட லட்சுமி நாராயணர் சிலை
கண்மாயில் இருந்து மீட்கப்பட்ட லட்சுமி நாராயணர் சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், 
வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைக்குளம் கண்மாயில் கி.பி. 18-ம் நூற்றாண்டை சேர்ந்த லட்சுமி நாராயணர் கற்சிலை கிடப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் அங்கு சென்றார். வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அந்த சிலையை மீட்டு அருங்காட்சியகத்திற்கு கொண்டுவந்து பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார். இந்த கற்சிலை நாராயணர், லட்சுமியை இடது பக்கம் வைத்துக்கொண்டு காட்சியளிக்கும் வகையில் உள்ளது.