காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 1 பேர் எழுதினர்.
செங்கல்பட்டு,
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குண்ணம் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி, சந்தவேலூர் மகரிஷி பன்னாட்டு பள்ளி, படப்பை ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளி, குன்றத்தூர் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி என 4 மையங்களில் 2 ஆயிரத்து 314 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு அடுத்த தண்டரை. மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, வேதநாராயாணபுரம், கேளம்பாக்கம், செங்கல்பட்டு பழவேலி, செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் என 6 மையங்களில் 2 ஆயிரத்து 1 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story