செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகளுக்கு பெயிண்டு அடிக்கும் பணி தீவிரம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகளுக்கு பெயிண்டு அடிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 Sept 2021 4:33 PM IST (Updated: 16 Sept 2021 4:33 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு 2-வது கட்டமாக அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வாக்கு சீட்டுகளை போடுவதற்காக வைக்கப்படும் இரும்பு வாக்குப்பெட்டிகளுக்கு பெயிண்டு அடிக்கும் பணி காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story