கலை, அறிவியல் கல்லூரியில் 2-வது நாளாக கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கலை, அறிவியல் கல்லூரியில் 2-வது நாளாக கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கடந்த 4 மாத காலமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் வகுப்பு பாதிக்காத அளவிற்கு வகுப்பு நேரம் போக கல்லூரி வாயில் முன்பு 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story