மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் + "||" + 19 motorcycles confiscated from a lake near Tiruvallur

திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் 19 மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கண்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அந்த மோட்டார் சைக்கிளில் உள்ள எண்களை வைத்து அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் யார் என்று மணவாளநகர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டம் வாகன சோதனையில் ரூ.13 லட்சம் கார் சாவிகளை திருடிய 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் சாவிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி கட்டிட தொழிலாளி சாவு
திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே பாம்பு ஒன்று விவசாயியை கடித்தது. சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துபோனார்.
4. திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் திருவள்ளூரில் உள்ள தொழுநோயாளர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
5. ஓடும் காரில் திடீர் தீ விபத்து... குழந்தைகள் உட்பட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...!
திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.