வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் தகவல்


வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்  தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2021 10:57 PM IST (Updated: 10 Oct 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா தடு்ப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் கூறினார்

சின்னசேலம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

சின்னசேலம் அருகே உள்ள மகாபாரதி பொறியியல் கல்லூரியில் உள்ள  வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு செய்தார். 
அப்போது அறையின் உள்ளே தடுப்புகள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதா, வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் உள் மற்றும் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் பணியையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

கொரோனா தடுப்பூசி

பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் விவரங்களையும், வருகை பதிவேடுகள், வாக்குச்சீட்டு பிரிக்கும் அறைகள் மற்றும் எண்ணும் அறைகளையும் பார்வையிட்ட அவர் 6 சுற்றுகளில் வாக்கு எண்ணும் கிராமங்களின் விவரங்களை நுழைவு வாயில் முன்பு ஒட்ட வேண்டும் என்றார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் வரவேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அதற்கான சான்றையும் கொண்டு வரவேண்டும். வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் குடிதண்ணீர் வசதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் அவர் அதிகாரிகளுக்கு வழங்கினார். 

அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவக்கொழுந்து, துரைசாமி, சுமதி, உதவி அலுவலர் பழனிவேல், ஒன்றிய பொறியாளர் தனபால் மற்றும் போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story