வாக்குகள் எண்ண தாமதம்; அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
வாக்குகள் எண்ண தாமதம் செய்ததால் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசூர்,
திருவெண்ணய்நல்லூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நேற்று எண்ணப்பட்டன. இதில் டி.எடப்பாளையம், சித்தலிங்கமடம், டி.புதுப்பாளையம் பனப்பாக்கம், சி.மெய்யூர், டி.எடையார், சிறுமதுரை ஆகிய ஊராட்சிகளில் பதிவான வாக்குகள் காலை 11:30 வரை எண்ணப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருவெண்ணெய்நல்லூர் மேற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் தேர்தல் அலுவலர் ராம்குமார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க.வினர், வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், தாமதம் ஏற்பட்டால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது என்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story