பட்டா நிலத்தில் சாலை அமைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை
குளித்தலை அருகே பட்டா நிலத்தில் சாலை அமைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது.
குளித்தலை,
அமைதி பேச்சுவார்த்தை
குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சிக்குட்பட்டது விஸ்வநாதபுரம், சுப்பன் ஆசாரி களம். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் சார்பாக அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பட்டா நிலத்தில் சாலை மற்றும் தெருவிளக்கு அமைத்து தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்திருந்தார்.
இதுதொடர்பாக குளித்தலை தாசில்தார் விஜயா தலைமையில் இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.
பட்டா நிலம்
இதில் செந்தில்குமார் மற்றும் சுப்பன் ஆசாரி களம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நடுப்பட்டி - பனிக்கம்பட்டி செல்லும் சாலையிலிருந்து ஆசாரி களத்திற்கு செல்லும் பாதை மண் பாதையாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக அவதால் அவ்வழியாக செல்ல சிரமமாக உள்ளது. இப்பாதையில் உள்ள சில எண்கள் பட்டா நிலமாக உள்ளதால் அந்த பாதை நிலத்தை அரசு கையகப்படுத்தி சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர்.அந்த பாதையில் பட்டா நிலம் வைத்துள்ளவர்கள் பொதுமக்கள் இந்த பாதையில் நடந்து சென்றுவர தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தனர்.
உறுதி
எதிர்காலத்தில் அந்தப்பாதை நிலத்தை கையகப்படுத்தி சாலை வசதி அமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்கும் வரை அந்த பாதையை அனைவரும் ஒற்றுமையாக பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
மேலும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எந்தவித இடையூறு ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக மேற்படி அந்த பாதையை பயன்படுத்துவோம் என்று உறுதி அளித்ததின் பேரில் இந்த அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்தது.
Related Tags :
Next Story