டெய்லரை தாக்கிய நிதிநிறுவன அதிபர் கைது


டெய்லரை தாக்கிய நிதிநிறுவன அதிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 1:01 AM IST (Updated: 18 Oct 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

டெய்லரை தாக்கிய நிதிநிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்,
கரூர் ஜவகர் பஜாரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 48), டெய்லர். இவர் வெங்கமேட்டை சேர்ந்த முத்தரசு (41) என்ற நிதிநிறுவன அதிபரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காளியப்பன் ரூ.30 ஆயிரத்தை திருப்பி செலுத்தியதாக தெரிகிறது.
இந்தநிலையில் முத்தரசு தன்னிடம் மீண்டும் ரூ.10 ஆயிரம் கூடுதலாக கேட்டு தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாக கூறி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து முத்தரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story