சிவகாசி நகராட்சி கமிஷனர் திடீர் மாற்றம்


சிவகாசி நகராட்சி கமிஷனர் திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 20 Oct 2021 1:01 AM IST (Updated: 20 Oct 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி நகராட்சி கமிஷனர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி, 
சிவகாசி நகராட்சியின் கமிஷனராக பணியாற்றி வந்தவர் பார்த்தசாரதி. இவரை நகராட்சி நிர்வாக இயக்குனர் திருவண்ணாமலை நகராட்சிக்கு இடமாற்றம் செய்து அறிவிப்பு செய்துள்ளார். பார்த்தசாரதி இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதில் புதிய கமிஷனர் யாரும் சிவகாசி நகராட்சிக்கு அறிவிக்கப்படவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு நகராட்சியின் கமிஷனர் சிவகாசி நகராட்சி கமிஷனர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று நகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

Next Story