மூதாட்டியிடம் நகை பறிப்பு
மானாமதுரையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி தனபாக்கியம் (வயது 61). இவர் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களில் ஒருவர் திடீரென்று தனபாக்கியம் அணிந்திருந்த 10½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார். அவருடன் வந்த வாலிபரும் தப்பி ஓடினார். திருடன், திருடன் என அவர் சத்தம் போட்டார். அதற்குள் அவர்கள் இருவரும் மாயமாகி விட்டார்கள். இது குறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story