திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு தேங்கிய மழை நீரை அகற்றியவருக்கு அடி-உதை


திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு தேங்கிய மழை நீரை அகற்றியவருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 22 Nov 2021 9:19 PM IST (Updated: 22 Nov 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு தேங்கிய மழை நீரை அகற்றியவருக்கு தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் மஞ்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கண்ணன் (வயது 25). கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், இவரது வீட்டின் முன்பு மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று முன்தினம் அதை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதைக்கண்ட அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மகன்கள் செல்வராஜ், வெற்றிவேல், மனைவி குப்பம்மாள், தாயார் அம்னியம்மாள் ஆகிய 5 பேரும் எதிர்ப்பு தெரிவித்து கண்ணனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்ணன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக மேற்கண்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story