மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் முறையான அனுமதி இல்லாத3 தங்கும் விடுதிகள், 2 மசாஜ் சென்டர்களை மூட உத்தரவுதுணை போலீஸ் சூப்பிரண்டு அதிரடி + "||" + Order to close massage centers

ஏற்காட்டில் முறையான அனுமதி இல்லாத3 தங்கும் விடுதிகள், 2 மசாஜ் சென்டர்களை மூட உத்தரவுதுணை போலீஸ் சூப்பிரண்டு அதிரடி

ஏற்காட்டில் முறையான அனுமதி இல்லாத3 தங்கும் விடுதிகள், 2 மசாஜ் சென்டர்களை மூட உத்தரவுதுணை போலீஸ் சூப்பிரண்டு அதிரடி
ஏற்காட்டில் முறையான அனுமதி இல்லாமல் இயங்கிய 3 தங்கும் விடுதிகள், 2 மசாஜ் சென்டர்களை மூட வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஏற்காடு
தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்கள்
ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்கள், ஸ்பா ஆகிய இடங்களில் துணை போலீஸ்  சூப்பிரண்டு தையல்நாயகி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது 3 தங்கும் விடுதிகள் மற்றும் 2 மசாஜ் சென்டர்களில் முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதி இல்லாததால் அவற்றை உடனடியாக மூட உத்தரவிட்டார். 
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் முறையான அனுமதி பெற்ற தங்கும் விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும். சொகுசு வீடுகள் மற்றும் காட்டேஜ்களில் தங்க வேண்டாம். மீறி தங்கினால் அவர்களது உடைமைகள் மட்டுமின்றி வேறு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் பாதுகாப்பு உத்தரவாதம் எதுவும் அளிக்க முடியாது. 
‘சீல்’ வைக்கப்படும்
மேலும் ஏற்காட்டில் இனி மசாஜ் சென்டர், ஸ்பா ஆகியவை நடத்த முறைப்படி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று தான் நடத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் சொகுசு பங்களாக்கள் மற்றும் காட்டேஜ்கள் முறையான அனுமதி இல்லாமல் நடத்தினால் கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி கூறினார்.