சாலையோர பள்ளத்தில் பாய்ந்த கார்
வேடசந்தூர் அருகே சாைலயோர பள்ளத்தில் கார் ஒன்று பாய்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வேடசந்தூர்:
மதுரையில் இருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை திருச்செங்கோட்டை சேர்ந்த முருகேசன் (வயது 34) என்பவர் ஓட்டினார். அந்த காரில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர்.
நேற்று மாலை வேடசந்தூர்-கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி என்னுமிடத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி மேம்பாலத்தின் அருகே சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 7 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story