ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு வீட்டில் பணம்-நகை கொள்ளை
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு வீட்டில் பணம்-நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திரு.வி.க. நகர்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு நல்லம்ம நாயுடு (வயது 83). இவர் கடந்த மாதம் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே பெரவள்ளூரில் பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 7 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து நல்லம்ம நாயுடுவின் மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story