தூக்கில் பிணமாக தொங்கிய வடமாநில பெண்


தூக்கில் பிணமாக தொங்கிய வடமாநில பெண்
x
தினத்தந்தி 20 Dec 2021 9:57 PM IST (Updated: 20 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

தூக்கில் பிணமாக தொங்கிய வடமாநில பெண்

வீரபாண்டி:
திருப்பூர் மங்கலம் சாலை குளத்துப்புதூர் சவுந்தர்யா தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது அங்கு பெண் ஒருவர் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த மத்திய போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த வீட்டில் இருந்தவர்கள் ஒடிசா மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த சேகுவாரா (வயது 38). இவரது மனைவி நாராயணி ஜினா (32) ஆகியோர் என்பதும் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவர் தலைமறைவாக இருப்பது போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story