குளித்தலை அருகே 88 மணல் மூட்டைகள் பறிமுதல்
88 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் அதிக அளவிலான மணல் மூட்டைகள் இருப்பதாக குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற அவர் அங்கிருந்தவர்களிடம் மணல் மூட்டைகள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அங்கிருந்த 88 மணல் மூட்டைகளை அவர் பறிமுதல் செய்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் மூட்டைகள் ஏதேனும் கட்டுமான பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததா? அல்லது மணல் கடத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story