தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் பலி


தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 10 Jan 2022 12:44 AM IST (Updated: 10 Jan 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருேக தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுவன் பலியானார்.

காரியாபட்டி, 
திருச்சுழி அருேக தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுவன் பலியானார். 
தண்ணீர் தொட்டி 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்லூரணியை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி முத்துமாரி. இவர்களது 4 வயது மகன் கங்கா ஸ்ரீதரன். இந்தநிலையில் முரளிதரன் தனது மாமனார் வீடான பனையூர் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்தார். 
கங்கா ஸ்ரீதரன் நேற்று காலை வீட்டின் அருகே தெருவில் சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்தான். அவனது பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்தனர்.
பின்னர் வெளியே வந்து அவர்கள் பார்த்தபோது, கங்கா ஸ்ரீதரனை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவனது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. 
ஏமாற்றத்துடன் அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புள்ள தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது தொட்டிக்குள் கங்கா ஸ்ரீதரன்  விழுந்து கிடப்பது தெரியவந்தது.
சிறுவன் பலி 
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே அவனை மீட்டு, சிகிச்சைக்காக  திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். 
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சைக்கிள் ஓட்டி விளையாடியபோது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story