ஆன்லைன் பதிவு தொடங்கிய 5 மணி நேரத்தில் 3,500 காளைகள், 1,400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்.


ஆன்லைன் பதிவு தொடங்கிய 5 மணி நேரத்தில் 3,500 காளைகள், 1,400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்.
x
தினத்தந்தி 12 Jan 2022 3:36 AM IST (Updated: 12 Jan 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் பதிவு தொடங்கிய 5 மணி நேரத்தில் 3,500 காளைகள், 1,400 மாடுபிடி வீரர்கள் பதிவு

மதுரை
ஆன்லைன் பதிவு தொடங்கிய 5 மணி நேரத்தில் 3,500 காளைகள், 1,400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்.
தடுப்பூசி
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக ஜனவரி 16-ந் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அன்றைய தினம் ஊரடங்கு காரணமாக 17-ந் தேதி நடத்தப்படுகிறது. அதோடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். 300 காளைகளுக்கு மட்டுமே அனுமதி, கட்டாயம் தடுப்பூசி என பல விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
அரசின் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கலெக்டர் அனிஷ்சேகர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு நேரடியாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைன் மூலம் பதிவு நடக்கிறது. அதற்காக www.madurai.nic.in என்று பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
5 மணி நேரத்தில்...
இந்த பதிவு நேற்று மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாலை 5.30 மணிக்கு பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏராளமான பதிவு செய்தனர். பதிவு தொடங்கிய 5 மணி நேரத்தில் அதாவது இரவு 10.30 மணி வரை 3,500 காளைகளும், 1,400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். இந்த பதிவு இன்று(புதன்கிழமை) மாலை 5 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. 
பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படும்.

Next Story