திருச்சி மாநகர போலீசார் 7 பேருக்கு கொரோனா


திருச்சி மாநகர போலீசார் 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jan 2022 7:10 PM GMT (Updated: 12 Jan 2022 7:10 PM GMT)

திருச்சி மாநகர போலீசார் 7 பேருக்கு கொரோனா

திருச்சி, ஜன.13-
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் குறைந்து இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்படாமலிருக்க ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதேபோல் காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் போலீசார் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் ஜீயபுரம்  துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவருக்கும், ஜீயபுரம் போலீஸ் நிலைய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

Next Story