பயணிகள் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு


பயணிகள் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 4:37 AM GMT (Updated: 13 Jan 2022 4:37 AM GMT)

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக கொரோனா தடுப்பூசி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு தடுப்பூசி மையத்தை அமைத்தது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 3-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக கொரோனா தடுப்பூசி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக தமிழக பொது சுகாதாரத்துறை சென்னை விமான நிலைய ஆணையகத்துடன் இணைந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் வகையில் தடுப்பூசி மையத்தை அமைத்தது. இந்த தடுப்பூசி மையத்தை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார். இதில் விமான நிலைய பொது மேலாளர்கள் எஸ்.எஸ்.ராஜூ, ராஜ்குமார், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story