மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில்68 கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள்அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார் + "||" + 68 Uniforms for temple staff

நாமக்கல்லில்68 கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள்அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

நாமக்கல்லில்68 கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள்அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் 68 கோவில் பணியாளர்களுக்கு சீருடைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 21 கோவில்களில் பணியாற்றி வரும் 40 அர்ச்சகர்களுக்கு 2 சீருடைகளும், கோவில்களில் பணிபுரியும் 68 பணியாளர்களுக்கு 2 செட் சீருடைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.