மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில்ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனாமுதியவர் சாவு + "||" + In Dindigul district Corona for 122 people in a single day The death of an old man

திண்டுக்கல் மாவட்டத்தில்ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனாமுதியவர் சாவு

திண்டுக்கல் மாவட்டத்தில்ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனாமுதியவர் சாவு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று 35 பெண்கள் உள்பட ஒரே நாளில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் பல மாதங்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு 100-ஐ கடந்து இருக்கிறது. இது நேற்று முன்தினத்தை விட 50 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 284 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே பழனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் கொரோனாவின் 3-வது அலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 653 ஆனது.