பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதில் பருத்தி கொட்டை, பப்பாளி விதை இருந்ததால் போராட்டம். குடோன் தர ஆய்வாளர் பணியிடை நீக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதில் பருத்தி கொட்டை, பப்பாளி விதை இருந்ததால் போராட்டம். குடோன் தர ஆய்வாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 18 Jan 2022 6:43 PM GMT (Updated: 18 Jan 2022 6:43 PM GMT)

திருப்பத்தூர் பகுதியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதில் பருத்தி கொட்டை, பப்பாளி விதை இருந்ததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக குடோன் தர ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர்

மிளகுக்கு பதில் பருத்தி கொட்டை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்களாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதில் பருத்தி கொட்டை, பப்பாளி விதை ஆகியவை இருந்தது. மேலும் சீரகம், மல்லித்தூள், மிளகாய்தூள் ஆகிய பொருட்கள் மிகவும் மோசமாக தரமற்று இருந்தது. 

பணியிடை நீக்கம்

இதனை வாங்கி பார்த்த பொதுமக்கள் ஆசேவம் அடைந்து ரேஷன் கடையின் முன்பு போராட்டம் நடத்தி, விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தரமற்ற பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இதனிடையே பொருட்களின் தரத்தை சரிவர ஆய்வு செய்யாமல் அப்படியே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்த திருப்பத்தூர் குடோன் தர ஆய்வாளர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வேலூர் மண்ட மேலாளர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

Next Story