இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2022 6:58 PM GMT (Updated: 2022-01-21T00:28:09+05:30)

களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

களக்காடு:
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் லெனின் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சுகுமார், பாலன், திருமணி, ஜவஹர், மோகன், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story