மோட்டார் சைக்கிள் மோதி நகை தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி நகை தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 20 Jan 2022 7:05 PM GMT (Updated: 2022-01-21T00:35:03+05:30)

கருங்கலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நகை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கருங்கல்:
கருங்கலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நகை தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி
கருங்கல் அருகே உள்ள வாழ்வச்சகோஷ்டம் குன்னம்பாறையை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 58). இவர் கருங்கலில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை செய்யும் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பத்மநாபன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
 மோட்டர் சைக்கிள் மோதல்
அப்போது, கருங்கலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி கீழ்குளம் வில்லாரிவிளையை சேர்ந்த வின்சென்ட் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பத்மநாபன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பத்மநாபன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story