மாவட்ட செய்திகள்

வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை + "||" + Murder

வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை

வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை
ஒன்றாக மது குடித்த போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவருடைய அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, 

ஒன்றாக மது குடித்த போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவருடைய அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை வாலிபர்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகள் முனீஸ்வரி (வயது 35), மகன் ஈசுவரன் (24).
இதில் முனீஸ்வரிக்கு திருமணமாகி, மதுரை சிலைமான் அருகே உள்ள கல்மேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய கணவர் மதுரைவீரன் (43). 
ஈசுவரனும் தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார். இவர்கள் 3 பேரும் பழைய பொருட்களை சேகரித்து விற்பளை செய்யும் தொழில் செய்து வந்தனர். இந்தநிலையில் மதுரை வீரன், ஈசுவரன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு கல்மேடு பகுதிக்கு சென்று மது குடித்துள்ளனர். 

குத்திக்கொலை

நள்ளிரவில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த மதுரை வீரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈசுவரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஈசுவரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நேற்று அதிகாலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் ஈசுவரன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஈசுவரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் இருந்த மதுரை வீரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
====

தொடர்புடைய செய்திகள்

1. கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை
கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
2. ஜம்மு-காஷ்மீர்: போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது போலீசார் தடியடி; விசாரணைக்கு கவர்னர் உத்தரவு!
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட் ராகுல் பட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
3. கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் வெட்டிக் கொலை - டிரைவர் கைது....!
சென்னை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வெட்டி கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆலங்குடி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை தம்பதிகள் கைது
ஆலங்குடி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.
5. வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்துக்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வீட்டில் புதைத்துவிட்டு மாயமான தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்