வாகன சோதனையில் மூடை, மூடையாக புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது


வாகன சோதனையில் மூடை, மூடையாக புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2022 7:36 PM GMT (Updated: 30 Jan 2022 2:47 AM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன சோதனையில் மூடை, மூடையாக புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன சோதனையில் மூடை, மூடையாக புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

வாகன சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடை, மூடையாக இருந்தன. 

இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மினிலாரியை புகையிலை பொருட்களோடு பறிமுதல் செய்த போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையம் கொண்டு கொண்டு வந்தனர். 

4 பேர் கைது

இதுதொடர்பாக சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 31), மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த சுப்புராஜ்(27), வத்திராயிருப்பு கோவிந்த நல்லூர் பகுதியை சேர்ந்த சக்தி முருகன்(29),ஜெய்ப்பூரை சேர்ந்த பிரகாஷ்(33) ஆகிய 4 பேரையும் நகர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த புகையிலை பொருட்கள் எங்கே இருந்து கொண்டுவரப்பட்டது, எந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story