பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 9:29 AM GMT (Updated: 2022-01-30T14:59:31+05:30)

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவொற்றியூரை சேர்ந்தவர் ராகவா ராஜ் (வயது 36). டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். அதனை வீடியோவாக எடுத்து, அதை காட்டி மிரட்டி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதில் மாணவி கர்ப்பமானார். அந்த கர்ப்பத்தை கலைக்க ராகவா ராஜ், மாத்திரை வாங்கி கொடுத்தார். அதை சாப்பிட்ட மாணவி வலியால் அலறி துடித்தார். இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த டிரைவர் ராகவாராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story