குன்றத்தூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது


குன்றத்தூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 5:33 PM IST (Updated: 30 Jan 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என்றும், தனது மகளை கண்டுபிடித்து தருமாறும் பெற்றோர் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்ட நிலையில் நந்தம்பாக்கத்தை சேர்ந்த கரண் (வயது 22) என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில், போலீசார் விசாரணையில் சிறுமிக்கு 17 வயது என தெரியவந்ததையடுத்து, சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கரணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story