தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:54 PM GMT (Updated: 31 Jan 2022 4:54 PM GMT)

தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி:
தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு  பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் தை அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவில்களில் சமூக இடைவெளியுடன் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி எஸ்.வி. ரோடு அபய ஆஞ்சநேயர் கோவிலில் தை அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வே.முத்தம்பட்டி
வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல் குப்புசெட்டிப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story