57 பேர் வேட்புமனு தாக்கல்


57 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 31 Jan 2022 6:18 PM GMT (Updated: 31 Jan 2022 6:18 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 57 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சிவகங்கை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 57 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது இதையொட்டி கடந்த28-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வந்தன. 30-ந் தேதி முடிய சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 285 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. 
இந்நிலையில் தை அமாவாசையான நேற்று மாவட்டம் முழுவதும் 57 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். சிவகங்கை நகராட் சியில் காலியாக உள்ள 27 வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.சார்பில் 2 வேட்பாளர்கள், சுயேச்சை 2 பேர்  உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

காரைக்குடி

இதுதவிர காரைக்குடி நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 4 பேரும் தேவகோட்டை நகராட்சி வார்டு பதவிக்கு போட்டியிட 16 பேரும் மானாமதுரை நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒருவரும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதேபோல இளையான்குடி பேரூராட்சியில் 5 பேரும் கண்டனூர் பேரூராட்சியில் 7 பேரும், கோட்டையூர் பேரூராட்சியில் ஒருவரும், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் 8 பேரும், நெற்குப்பை பேரூராட்சியில் 2 பேரும், புதுவயல் பேரூராட்சியில் 4 பேரும், சிங்கம்புணரி பேரூராட்சியில் 2 பேரும், திருப்புவனம் பேரூராட்சியில் 2 பேரும், திருப்பத்தூர் பேரூராட்சியில் ஒருவரும் என மொத்தம் 57 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Next Story