தேனி அல்லிநகரம் நகராட்சியில் தி.மு.க. வேட்பாளர்களாக கணவன்-மனைவி மனு தாக்கல்


தேனி அல்லிநகரம் நகராட்சியில் தி.மு.க. வேட்பாளர்களாக கணவன்-மனைவி மனு தாக்கல்
x
தினத்தந்தி 4 Feb 2022 1:04 PM GMT (Updated: 4 Feb 2022 1:04 PM GMT)

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தி.மு.க. வேட்பாளர்களாக கணவன்-மனைவி மனுதாக்கல் செய்தனர்.

தேனி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். 
இந்நிலையில் தி.மு.க. சார்பில் கணவன், மனைவி மனு தாக்கல் செய்துள்ளனர். தேனி நகர தி.மு.க. பொறுப்பாளர் பாலமுருகன் 20-வது வார்டுக்கும், அவருடைய மனைவி ரேணுப்பிரியா 10-வது வார்டுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ரேணுப்பிரியா வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். கடந்த வாரம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். 
தேனி அல்லிநகரம் நகராட்சி உள்பட மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story