வாலிபருக்கு அரிவாள் வெட்டு
ராமநாதபுரம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ராமநாதபுரம்,
இதனால் இவர்கள் கார்த்திகேயன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் கார்த்திகேயனுக்கு செல்போனில் அழைத்து ஏன் பேசுவதில்லை என்று கேட்டபோது எதுவும் பதில்சொல்லாமல் செல்போனை அணைத்துவிட்டாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் மது அருந்திவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்களாம். அப்போது கார்த்திகேயன் காட்டூரணி சாலையில் ஆடுகளுக்கு இலை தழை பறிக்க அரிவாளுடன் வந்துள்ளார். அவரை கண்ட இருவரும் அரிவாளை பறித்து கொண்டு கார்த்திகேயனை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து திலீபன், ராம்பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story