மதஉணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது
மதஉணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது
பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளில் போட்டியிடும் 113 வேட்பாளர்களுக்கு, தேர்தல் விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலரான விநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கலாம். ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ய அனுமதி பெற வேண்டும். வாக்காளர்களின் மத, இன, ஜாதி, உணர்வுகளைத் தூண்டி வாக்கு கேட்கக் கூடாது. ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் ஒரு வேட்பாளருக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து வேட்பாளர்களுக்கு விளக்கப்பட்டது. கூட்டத்தில், பல்லடம் நகராட்சி தேர்தல் பார்வையாளர் ஜெரினா பேகம், தேர்தல் துணை அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், மற்றும் வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story