மயிலாப்பூரில் மரக்கடையில் திடீர் தீ விபத்து


மயிலாப்பூரில் மரக்கடையில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 1 March 2022 3:44 PM IST (Updated: 1 March 2022 3:44 PM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூரில் மரக்கடை தீ விபத்தில் மரக்கடையில் இருந்த ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 52). இவர் மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் மரக்கடை வைத்திருக்கிறார். நேற்று மதியம் ராமச்சந்திரன் மரக்கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அங்கிருந்து அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் மற்றும் அசோக்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ மேலும் பரவாமல் உடனடியாக அணைத்தனர். எனினும் தீ விபத்தில் மரக்கடையில் இருந்த ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story