உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர்வை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்


உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர்வை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 1 April 2022 9:53 PM IST (Updated: 1 April 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர்வை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்

உயிர்காக்கும் மருந்துகளின் விலை உயர்வை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  பொதுமக்கள் கூறினர்.
உயிர்காக்கும் மருந்து 
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்தபடி நேற்று முதல் 872 மூலக்கூறுகள் அடங்கிய அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை 10.76 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி காய்ச்சல், ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய், புற்று நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை சில வாரங்களில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறியதாவது
சுமை
பொன்ராஜ்
வாழ்வியல் மாற்றங்களால் உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் இன்று பலரும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் உயிர் காக்கும் மருந்துகளுக்கான விலை ஏற்றம் என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகப் பெரிய சுமையாகவே இருக்கும். 
சையத் ரிஜ்வான்
பெரும்பாலான குடும்பங்களில் வருமானத்துக்குத் தகுந்தபடி பட்ஜெட் போட்டே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது.அதிலும் பெட்ரோல், கியாஸ் விலை ஏற்றத்தால் மாதாமாதம் பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மருந்துகளின் விலை ஏற்றம் மேலும் சிக்கலை உருவாக்கும்.மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருந்தால் இந்த சுமையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாதிப்பு 
ஆனந்தன்,
நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இந்த விலை ஏற்றம் உருவாக்கும் மன அழுத்தத்தால் நோயின் தன்மை அதிகரித்து விடும் அபாயம் உள்ளது.
இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒரு குடும்பத்தில் பலர் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலை பல குடும்பங்களில் உள்ளது.இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.
பார்த்தீபன்
இன்றைய கால கட்டத்தில் செல்போன் ரீசார்ஜ், பெட்ரோல், சமையல் எரிவாயு, தொலைக்காட்சி சேனல் ரீசார்ஜ் இன்றியமையாதாகி விட்டது. இவையும் நாளுக்குநாள் ஓசையில்லாமல் உயர்ந்து விட்டது. 
ஏற்கனவே பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் உயிர்காக்கும்மருந்துகளின் விலைஉயர்வு மக்களுக்கு பேரிடியாகும். 
பணக்காரர்களின் வாழ்க்கை பற்றி அதிகம் சிந்திக்கும் மத்திய அரசு நடுத்தர ஏழை மக்களை சிந்்தித்தால் நிச்சயம் விலையை உயர்த்தாது. இந்தியா என்றால் ஏழைகள் வசிக்கும் நாடுதான். ஆனால் பணக்கார நாடுகளை போல் அடிக்கடி விலையை உயர்த்தினால் எப்படி வாழ்க்கை நடத்துவது. 
இந்தியாவில் வசதி படைத்தவர்களுக்கும், தொழிலதிபர்களுக்ளுக்கும் மத்திய அரசு தள்ளுபடி செய்த தொகை பல லட்சம் கோடி. அந்த தொைகயை தள்ளுபடி செய்யாமல் இருந்தால் இப்படி ஏழைகளை பாடாய்படுத்த வேண்டி இருக்காது.
 இ.சுப்பிரமணியன் 
விலைமதிப்பு இல்லாத மனித உயிர்களை காக்கும் மருந்துகளின் விலை உயர்வு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இதனால் கூலித் தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
ஜெ.விஜயசேகரன் 
 அன்றாட பயன்பாட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளார்கள்.
இந்த சுழலில் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை அரசு உயர்த்தி உள்ளது அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்

Next Story