வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 April 2022 9:40 PM IST (Updated: 14 April 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

ஆரணி

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் எஸ்.என்.பழனி. 

இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஏழுமலையின்  மகன்கள் சரவணன், சிவானந்தத்துக்கும் இடையே இட பிரச்சினை சம்பந்தமாக நீண்ட நாட்களாக விரோதம் இருந்து வருகிறது. 

சம்பவத்தன்று சரவணன், இவரின் மனைவி மற்றும் சிவானந்தம் ஆகியோர் சேர்ந்து பழனி தனது வீட்டில் இருக்கும்போது சரமாரியாக வீட்டின் மீது கற்களை வீசி, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். 

அதில் பழனியின் மனைவி சரஸ்வதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர், ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். சரவணன், மனைவி, சிவானந்தம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர்.
1 More update

Next Story