ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது


ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
x

ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் சத்தியமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில் அவர், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயதுடைய சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லை என்று ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் கர்ப்பமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது, தன்னை கொண்டப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (வயது 19) என்பவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன் என்று தெரிவித்தார். எனவே தினேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அந்த புகாரில் அதிகாரி கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா சோபியா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தார். பின்னர் அவர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு் சத்தியமங்கலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story