வாகனம் மோதி புள்ளிமான் பலி
வாகனம் மோதி புள்ளிமான் செத்தது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் சித்தளி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மயில், மான், காட்டுப்பன்றி ஆகிய வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், குடியிருப்பு பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சித்தளி வனப்பகுதி அருகே நேற்று மாலை சாலையைக் கடக்க முயன்ற 2 வயது பெண் புள்ளிமான் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியது. இதில் அந்த மான் பரிதாபமாக ெசத்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கொடுத்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று பலியான மானை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனை செய்து சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.
Related Tags :
Next Story