ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 7:22 PM GMT (Updated: 2022-04-30T00:52:08+05:30)

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே வனவேங்கைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் வாழும் காட்டு நாயக்கர் மற்றும் பல்வேறு சமூக மக்களுக்கு குறவன் என்ற ஜாதி சான்றிதழ் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே வனவேங்கைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வனவேங்கைகள் கட்சி விருதுநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.  மாநில துணை தலைவர் முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில்  வனவேங்கைகள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன், நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துமணி, வன வேங்கைகள் கட்சி நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியினர், தமிழர் தாயகம், தாய்நாடு மக்கள் கட்சி, மருதுமக்கள் இயக்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story