தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 April 2022 3:33 PM GMT (Updated: 30 April 2022 3:33 PM GMT)

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்:
தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வு 
திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி நேரில் ஆய்வு செய்தார். அப்போது திருவாரூர் உட்கோட்ட அளவிலான குற்ற வழக்குகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். 
பின்னர் அவர் கூறியதாவது:-
திருவாரூர் உட்கோட்ட அளவிலான குற்ற சம்பவங்களை தடுத்து சட்ட ஒழுங்கினை நிலை நாட்ட வேண்டும். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கண்காணிக்க வேண்டும்
நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். போலீசாருக்கு வாராந்திர ஓய்வு அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story